Monday, July 26, 2010

தாத்தாவும் பேரனும் வீக்கமும்.













கட்டுரை வெளிவந்து சில நாட்களின் பின்னர் அவர் என்னைத்தெருவில் சந்தித்தார்.அவர் ஒரு ஆசிரியர். அவரிடம் நான் படிக்கவில்லை.பல பேரப்பிள்ளைகள் கண்ட தாத்தாவுங்கூட.


’’நீ எழுதிய கட்டுரையைப்படிச்சன். இஞ்சை பார் என்ரை வீக்கத்தைப்பற்றி யாரோ எழுதியிருக்கிறாங்கள் என்று சொல்ல பிள்ளைதான் சொன்னவள் நீ

என்று.அப்ப இந்த கால்வீக்கம் என்னத்தாலை என்று சொல்லுறாய்’’
அவர் கால்கள் வீங்கியிருந்தன.எனக்கு சங்கடமாக இருந்தது.

‘’நீங்கள் போய் ஒரு டொக்டரட்டை காட்டுங்கோ எல்லாம் சோதிக்கவேணும்’’ என்றேன் நான்.
’’என்னவோ தம்பி.. நான் தமிழ் வைத்தியந்தான் செய்யிறன். என்ன இருந்தாலும் இருக்கட்டும்.ஆஸ்பதிரிப்பக்கமெல்லாம் போகமாட்டன்’’
என்று சொன்னார் .‘
’எழுது ‘’ என்று சொல்லிவிட்டுப்போனவர், மறையும் வரை தமிழ்வைத்தியந்தான் செய்தார்.



*முன்பு வெளிவந்த சிலகட்டுரைகள்:

மாணவப்பருவத்தில் எனக்கு எழுத இடமளித்து ஊக்குவித்த யாழ் உதயன் நிறுவனத்துக்கு எனது நன்றிகள்.

3 comments:

Abarajithan said...

நல்ல கட்டுரை டாக்டர். மட்டத்தேள் அருமை.

இரத்தத்தின் முக்கிய புரதங்களின் குறைபாட்டால் இரத்தப் பிளாஸ்மா வெளியேறி அதனால் வலியற்ற வீக்கம் உருவாகும் எனக் குறிப்பிட்டிருந்தீர்கள்.
அவ்வாறெனில், வீங்கிய திசுக்கள் நரம்புகளில் அழுத்துவதால்ல் இவ்வகை வீக்கத்திலும் வலி ஏற்படுமே?

A doctor said...

நன்றி.
நல்ல கேள்வி.
இரத்தப்பிளாஸ்மா வெளியேறுகிறது என்பதைவிட திரவம் வெளியேறுகிறது என்பது பொருத்தமானது.
வெளியேறிய திரவம் உடலில் உள்ள வெளிகளுக்குள் தேங்கும். எங்கள் தோலிற்குக்கீழ் உள்ள வெளியில் தேங்கும்போது வெளியில் வீக்கமாக தெரியும். நரம்புகள் தோலில் இருக்கின்றன.தோல் விரிவடையக்கூடியது.வலி நரம்புகள் தூண்டப்படுவதில்லை ஆனால் அதற்கும் ஒரு எல்லை இருக்கிறது. வீக்கம் கூடி தோல் பிரிந்து நீர்வடிவதுமுண்டு.

தோலில் தெரியும் வீக்கத்தைப்பற்றியே அப்படிக்குறிப்பிட்டேன்.
வலியோடு கூடிய வீக்கம் வெதனம் எனப்படும் என்று கலாப்ரியா தனது தளத்தில் குறிப்பிட்டிருந்தார்.அழற்சி அல்லது சீழ்க்கட்டி என்பன அந்த வகை.

உடலினுள் திறந்தவெளி,மூடியவெளிகள் உண்டு.
விரிவடையாத வெளியில் உதாரணமாக மண்டையோட்டினுள் மூளை வீக்கம் தலைவலியாக தொடங்கும்.
உடலினுள் விரிவடையாத வெளிகள் பல இருக்கின்றன.
விரிவடையாத வெளியினுள் ஏற்படுகிற வீக்கம் உயிராபத்தானவை.வலியை ஏற்படுத்தும்.நரம்புகளையும் அழுத்தும்.
உதாரணத்துக்கு கெண்டைக்காலின் தசைத்தொகுதிகள் வலிமையான சவ்வுகளால் சுற்றப்பட்டிருக்கும்.உள்ளே அழற்சிவந்து வீங்கும் போது அது நரம்புகளை இரத்த ஓட்டத்தை பாதித்துவிடும்.விண்ணென்ற வலி அதன் இயல்பு. கீழே கால் உணர்ச்சியிழந்து குளிரத்தொடங்கும்.
compartment syndrome என்பார்கள்.அவசர சிகிச்சையில் காலைத்திறந்து சவ்வை கத்தியால் கீறி தசையின் வீக்கத்துக்கு இடம் ஏற்படுத்துவார்கள்.
இல்லாவிட்டால் காலை இழக்கவேண்டி
வரும்.

Abarajithan said...

புரிந்தது. விளக்கத்துக்கு மிக்க நன்றி டாக்டர்.