ஊடகங்கள் உள நலம் சம்பந்தமான சமூக அறிவூட்டலில் பெரும்பாத்திரம் வகிக்கின்றன. சமுகத்தின் ஒரு அங்கமாக விளங்கும் மீடியா தகவல்களை அளிப்பது மாத்திரமல்லாது ஒரு பொது அபிப்பிராயத்தை உருவாக்கக்கூடியதாக வலுவான தாக்கத்தைச்செலுத்துவதாக இருக்கின்றது. மனநோய்கள் பற்றிய மன நோயாளிகள் பற்றிய மக்கள் மனப்பாங்கை உருவாக்கும் விழிப்புணர்வூட்டல் செயற்பாடுகளில் ஊடகப்பார்வையும் செய்தி வழங்கலும் இன்றியமையாதவை
.
.
ஊடகங்கள் தோற்றுவிக்கும் ,சித்திரிக்கும் மனநோய் அல்லது மனநோயளர் பற்றிய செய்திகள் உருவாக்கும் பயம் மனநிலை பாதிப்படைந்தவர்களோடு நேரில் உறவாடும்போது ஏற்படுவதில்லை, என்று ஆய்வுகள் தெரிவுக்கின்றன. இந்த ஆதாரம், எப்படி ஊடகங்கள் மக்களின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதை உறுதிப்படுத்துகிறது.
இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்கள் சமுகத்தில் உலவும் மனநோய்கள் பற்றிய தவறான நம்பிக்கைகளையும்,அபிப்பிராயங்களையும் அப்படியே பிரதிபலிக்கின்றன. சில வேளைகளில் உறுதிப்படுத்தவோ ஊக்கப்படுத்தவும் செய்கின்றன.
மனநோயாளர்களை கோமாளிகளாக, கொடுரமானவர்களாக சித்தரிப்பது , மனநோயாளிகளை கதைகளுக்கு சுவைத்திருப்பங்களாக உபயோகிப்பது ,மிகைப்படுத்தப்பட்ட உணர்ச்சித்தலையங்கங்களும் செய்திகளுமாக வெளியிடுவது என்பன ஆய்வுகளில் அவதானிக்கப்பட்டிருக்கின்றன.
அனேகமாக இந்தச்செய்திகள் மையப்படுத்துவது மனநோயால் பாதிப்புற்றவர்கள் ஆபத்தானவர்கள், அவர்கள் என்ன செய்வார்கள் என்று சொல்லமுடியாது என்பதான சித்தரிப்புக்களாகும்.
இவை சமூகத்தின் தவறான அணுகுமுறைத்தொடர்ந்தும் வைத்திருக்கவே உதவி செய்கின்றன.
சில ஊடகப்போக்குகள் சமுகத்தின் பிளவுகளை இன ரீதியாக சாதி மதரீதியான பார்வைகளை வலுப்படுத்தி ஒரு சில சமுகத்தவர்கள் தனிப்பட்டுப்போவதற்கும் உளவியல் ரீதியான நெருக்கடிக்கு ஆளாகி அதுவே உளநோய்களுக்கு ஆளாக்குவதற்கும் குணப்படுவதற்கு இடையூறாகி சுமையை அதிகரிப்பதற்கு காரணமாக இருக்கிறது.
மன ஆரோக்கியத்தில் ஊடகங்கள் பொறுப்புடன் செயற்படவேண்டும் என்பதற்காக சில அரசாங்கங்கள் தங்கள் நலத்திட்டங்களில் ஊடகங்கள் எப்படிச்செயற்படவேண்டுமென்ற வழிகாட்டல்களை ஊடகவியலாளருக்கு வழங்குகின்றன.
ஒரு மனநோயாளர் சம்பந்தப்பட்ட செய்தி, தகவல் அல்லது சமுகத்தின் தவறான மனப்பாங்கை மேலும் வலுப்படுத்தக்கூடாது என்பதற்காக ஊடகங்களும் இப்படிப்பட்ட நலத்திட்டங்களில் பங்கெடுக்க வேண்டும் என மக்கள் நல அரசுகள் திட்டங்களில் ஊடகவியலாளருக்கும் இடத்தை அளிக்கின்றன .உதாரணமாக ஆஸ்திரேலியா அரசு ஊடகவியாலாளருக்கு மனநோய் மற்றும் தற்கொலை பற்றிய செய்திகளை வழங்கும்போது உதவக்கூடிய தகவல் பொதிகளை அளிக்கிறது.முக்கியமாக இவர்கள் சமுகத்தின் தற்கொலை மனப்பான்மையை குறைப்பதற்காக கூடிய கவனத்தை ஊடகங்களூடாக செய்கிறார்கள்.
மனநோய்பற்றிய தவறான நம்பிக்கைகளை சமுகத்திலிருந்து களையவும் , உடலுக்கு ஏற்படும் நோய்கள் போலவே மனத்துக்கும் நோய்கள் ஏற்படலாம் உடல் நோய்கள் போலவே அவை குணமாக்கக்கூடியவை என்பதை உணராது குணமான பின்னரும் அவர்கள் மீது பைத்தியம் என்கிற முத்திரையை குத்தி ஓதுக்கும் மனப்பாங்கை மாற்றவும் பொறுப்புள்ள ஊடகங்கள் செயலாற்றவேண்டும்.
இந்த ஆக்கம் ஆஸியின் தேசிய மனநலத்திட்டத்தில் ஊடகமும் மனநலமும் என்ற பகுதியை தழுவி எழுதப்பட்டது.
*ஊடகங்கள் எப்படித்தவறாகச்சித்தரிக்கலாம், எப்படி அணுக வேண்டும் என்பன பற்றி சொல்லும் தளம்:
0 comments:
Post a Comment