Saturday, July 31, 2010

நைட் ஷிப்ட் பயங்கரம்!

’’எங்கள் வேலை கொஞ்சம் ரிலாக்ஸ்ட் ஆனது. நைட் ஷிப்ட் முடிச்சு வந்து உடனேயே தூங்குவதில்லை. சாப்பிட்டுவிட்டு கொஞ்சம் டீவி பாத்துக்கொண்டிருப்பேன்’’ என்றான் அவன்.
 ’அப்படியா’’ என்றேன். (அங்கே தூங்கினால் பிறகு தூக்கம் வராதுதானே)
’’உன் ஹொஸ்பிட்டலில் எப்படி?’’
நேற்று இரவு ஷிப்ட்  பம்பரமாகச்சுழல வேண்டியிருந்தது.எல்லா கடுமையான வருத்தக்காரரும் இந்த இரவுக்காக காத்திருந்து வந்தது போல இருந்தது.அர்த்த சாமத்தில் தொடங்கிய தலைவலி  இன்னும் நிற்கவில்லை. அடப்பாவி போன் எடுத்து நேரம் தெரியாமல் கதைக்கிறாய்.பொறு. .
‘’எங்கட ஷிப்ட் இன்னும் ரிலாக்ஸ்.”
’’வந்த உடனேயே படுத்து விடுவியா?’’
‘ எட்டுமணிக்கு ஷிப்ட் முடியுது என்றால்  எட்டைந்துக்கு தூங்கத்தொடங்கிவிடுவேன்.அப்படியே ஸ்ட்ரெச்சரில் வைத்து தள்ளிக்கொண்டு வந்து ரெஸ்ட் அறையில் விட்டு விட்டு அடுத்த ஷிப்ட் டொக்டரை தூக்கம் கலைந்துவிடாதபடி தள்ளிக்கொண்டுபோவார்கள்’’
‘’சரியப்பன் பிறகு கதைக்கிறேன் ‘’ என்றான் அவன்.

2 comments:

கிரி said...

முடியலை....

வரசித்தன் said...

@கிரி

முடியணும்