Saturday, July 24, 2010

மூட் ஜிம்! - Mood Gym



அவசர உலகில் நின்று ஒருவரோடு பேச நேரமில்லை.

அன்டன் செக்கோவின்(Anton Checkov) ஒரு சிறு கதையில் குதிரை வண்டிக்காரன் பனியும் குளிரும் நிறைந்த தெருக்களில் தன் மகன் இறந்த சோகத்தை வண்டியில் பயணிப்பவர்களிடம் சொல்ல முயலுவான்.

யாரும் கேட்பதாக இல்லை. அவனைத்திட்டி வாயை மூடச்செய்வார்கள். 
இறுதியில் குதிரையிடம் சொல்லத்தொடங்குவான்.குதிரையால் திட்ட முடியாதில்லையா?

இன்றைக்கு விஞ்ஞானம் வளர்ந்துவிட்ட நிலையில் கணனித்திரை நம்மோடு பேசத்தொடங்கிவிட்டது.
அது நம்மைத்திட்டுவதில்லை.

ஜிம்முக்குப்போய் உடலை ஜம்மென்று வைத்திருந்தாலும் மனம் உள்ளே சுருங்கிய பலூனாக கிடக்கும் சிலருக்கு.
மூட் சரியில்லாதவர்களுக்காய் மனத்துக்கு ஒரு ஜிம்மை,ஒருஆஸ்திரேலியா பல்கலைக்கழகத்தினர்  மூட் ஜிம் என்ற பெயரில் வலைத்தளத்தில் உருவாக்கி வைத்திருக்கின்றனர்.. அது ஒரு எண்ணவழிச்சிகிச்சை முறையில் இயங்குகிற இணைய ப்ரோக்கிராம்.(cognitive therapy based online program)

மனச்சோர்வு, பதற்றம் போன்றவற்றுக்கு எண்ணவழிச்சிகிச்சை-Cognitive Therapy  மூலம் உதவி செய்கிறது இந்தத்தளம். இரண்டுலட்சத்துக்குமேல் இதில் பயன் பெற்றிருக்கிறார்களாம்.
 அது எண்ணவழிச்சிகிச்சைக்கான பயிற்சியுங்கூட.

யோசிப்பவர்கள் ,தாழ்வு மனப்பான்மை உள்ளவர்கள்,கவலைப்படுபவர்கள் மனம் பலவீனமாக இருப்பதாக
உணருபவர்கள் இந்த தளத்தின் எண்ணத்தைத்தூண்டும் வினாக்களுக்கூடாக சுய பரிசோதனையாக ஒருமுறை சென்று பாருங்கள். பயன் பெறலாம்.
அனோனிமஸ் ஆகவே போய்வரலாம். 
அது ஒரு இலவச சேவை!
இதைக்கிளிக்குங்கள்:www.moodgym.anu.edu.au

0 comments: