Saturday, August 14, 2010

80 சிகரட்டுகளைப் புகைத்த குழந்தை!


Passive smoking-புகையூட்டல்
வீட்டினுள்புகைத்தபடி அல்லது காருக்குள் புகைத்தபடி இருக்கும் பெற்றோர் அல்லது உறவினரோடு வாழும் குழந்தை
முதலாவது பிறந்ததினத்தைக்கொண்டாடும் போது எண்பது சிகரட்டுக்களின் புகையை உள்ளெடுத்து விட்டிருக்கும் என்பதை நீங்கள் அறிவீர்களா?



ஏன்?

புகையும் சிகரட் முனை வெளிவிடும் புகை, புகைப்பவர் உள்ளிழுத்து விடும் புகை சூழல் சிகரட் புகை, இச்சையின்றிய புகைத்தல் எனப்படுகிறது. கண்ணுக்குப்புகைதெரியலாம் அல்லது புகைவது தெரியாமல் இருக்கலாம். ஆனால் அது காற்றில் விடுவது புகைப்பவர் உள்ளெடுக்கும் புகையைக்காட்டிலும் அபாயமான பதார்த்தங்களைக்கொண்டிருக்கிறது.(சிகரட் முனையில் எழும் புகை).
சிறிய பிஞ்சு சுவாசப்பைகளைக்கொண்டிருக்கும் குழந்தைகளில் அதன் தாக்கம் அதிகம்.

இந்தப்புகை,
·        நிக்கொட்டின் என்னும் அடிமைப்படுத்தும் பதார்த்தத்தைக்கொண்டிருக்கும்.
·        கரி அல்லது தார் –இது சுவாசக்குழாய்,சுவாசப்பைகளில் படிந்து படலமிடும்.அது சுவாசத்தைக்கடினமாக்கும்
·        வாகனப்புகை போன்றதுதான் மேற்சொன்ன சிகரட் கரிப்புகை.சுவாசப்பையில் ஏற்படும் இந்தத்தடையை மீறி உடலை இயங்கச்செய்ய இதயம் கூடுதலாக வேலை செய்யவேண்டி இருக்கும்.

இப்படி புகைப்பவர்களின் புகையச்சுவாசிக்கும் குழந்தைகள்,சிறுவர்களில்....
·        ஆஸ்த்மா அல்லது ஈழை நோய்க்கு ஆளாகும் தன்மை அதிகரிக்கும்
·        ஆஸ்த்மா உள்ளவர்கள் நோய் கடுமையாகும் அடிக்கடி ஆஸ்த்மாவின் தாக்குதல் நிகழும்
·        சுவாசப்பையின் தொழில் பாதிப்படைந்து நுரையீரல் வளர்ச்சி பாதிப்படையும்.
·        அடிக்கடி சளி,காது,மூக்கு தொண்டை,நெஞ்சு அழற்சிகள் ஏற்படும்
·        சில பச்சிளங்குழந்தைகள் தொட்டிலில் திடீரென இறப்பதற்கும் இந்தப்புகைகள் காரணமாகின்றன.

புகையில் உள்ள 4000 தீங்கான பதார்த்தங்கள் உங்கள் குழந்தையை நோயாளியாக்கத்தானே செய்யும்.

ஆகவே குழந்தைகளுக்கு அருகில் புகையாதீர்கள்.
குழந்தையுள்ள வீட்டுள் காரில் வாகனத்தில் புகையாதீர்கள்.

ஆக ஏன் பொது இடத்தில் புகைப்பது தவிர்க்கப்படவேண்டும் என்பதைப்புரிந்து கொள்ளுங்கள்.

இது NSW உடல் நலப்பிரசுரத்தின் தமிழாக்கம்.
ஆங்கிலத்தில் பார்க்க:சொடுக்கவும் 


புகைத்தல் சூழலில் ஏற்படுத்தும் தாக்கம் பற்றி பலவருடங்களுக்கு முன்னர் வந்த ஒரு ஆக்கம்
                                புகையில்லாப்பயணம்-





படங்கள்:கட்டுரைக்கான படங்களை முதலாந்தர தமிழ்ப்பாடப்புத்தகத்திலிருந்து எடுத்து மாற்றஞ்செய்தேன். பாடப்புத்தகத்திலிருந்த படங்களை வரைந்தவர் ஓவியர் இராசையா.மறக்கமுடியாத படங்கள்.

 நன்றி: யாழ் உதயன்.


2 comments:

Abarajithan said...

டாக்டர்,

பதிவும் கட்டுரையும் சூப்பர்.

//ஏன் பாட்டிகளை மூலையில் உட்கார வைக்கிறார்கள்?//

மில்லியன் டாலர் கேள்வி!!

A doctor said...

நன்றி அப்பராஜிதன்.