(பெரிதாக்க அழுத்தவும்)
இந்தக்கட்டுரை சுகாதாரக்கட்டமைப்பின் சீரழிந்த தன்மையால்(health system failure) பிறந்தது.
சீரழிவுக்கு அரசியல்,இனச்சிக்கல்,போர்,பொருளாதாரம்,ஊழல் எனப்பல காரணங்கள்.
சுகாதாரக்கட்டமைப்பை சரியாகபேணுகிற சட்டங்களை இறுக்கமாக பேணுகிற நாடுகளில் இப்படி எழுதவேண்டி வருவதில்லை.
ஏனென்றால் அங்கு மக்கள் மருந்துகளை நேரடியாகப்பெறமுடியாது.மருத்துவர்கள் கட்டுப்பாடின்றிமருந்துகளை சிபார்சு செய்யமுடியாது.
மருந்துச்சிட்டையில் மருந்துவரின் மருந்து சிபார்சு செய்வதற்கான லைசன்ஸ் நம்பர் (prescriber number)இல்லையென்றால் மருந்துக்கடைகளில் மருந்து கொடுக்கமுடியாது.
மருந்துச்சிட்டையில் மருந்துவரின் மருந்து சிபார்சு செய்வதற்கான லைசன்ஸ் நம்பர் (prescriber number)இல்லையென்றால் மருந்துக்கடைகளில் மருந்து கொடுக்கமுடியாது.
ஒவ்வொரு மருத்துவரும் எழுதிக்கொடுக்கும் மருந்தும் மத்திய மருந்து நிலையத்தில் பதிவாகும்.கண்காணிக்கப்படும்.
மருந்துப்பாவனையைக்கண்காணிப்பவர்கள் மருத்துவர் ஒருவர் மருந்தை முறையற்ற விதத்தில் சிபார்சு செய்கிறாரென்றால் உடனேயே விளக்கம் கோருவார்கள். அவர் அதற்கு விளக்கம் கொடுக்க வேண்டும்.
தவறினால் அவருடைய மருந்து சிபாரிசு உரிமம் நிறுத்தப்பட்டுவிடும்.
பக்கவிளைவு கூடிய அல்லது பெறுமதி வாய்ந்த மருந்தை சிபாரிசு செய்ய்யும்போது தலைமையகத்தில் அனுமதிபெறவேண்டும்.
சிறப்பாக இயங்கும் சுகாதாரக்கட்டமைப்பில் மருந்துகள் பாதுகாப்பானவை.
சீரழிந்த கட்டமைப்பில், (அறியாமையும் சேர )அவை நஞ்சாக மாறும்.
அண்டிபயட்டிக் கிருமிகளுக்கெதிரான ஆயுதம்.அது கிடைக்காமல் தடுத்தால் அது மனிதர்களுக்கு எதிரான ஆயுதம்.
தொற்றுநோய்களும் இனங்களை அழிக்கும்.
நன்றி:யாழ் உதயன் பத்திரிகை


5 comments:
வாழ்த்துகள் ஜி.
அச்சில் வந்ததைப் பதிவிலும் தந்திருக்கலாமே?
சுவையாக சொல்கிறீர்கள், முடிவில் சிந்திக்கச் செய்கிறீர்கள்.
மிக்க நன்றி.
நன்றி நட்பாஸ்
நேரம் கிடைக்கும்போது தட்டச்சிடுகிறேன்.
இது ஒருவகை ஒன்லைன் சேமிப்பு.
இடப்பெயர்வுகளில் தொலையாது.
:)
நீங்கள் பொதுத் தமிழில் எழுவதைவிட பேச்சுத் தமிழில் எழுதுவதை நான் இருகரம் கொட்டி பாவிக்கிறேன்...
(சரிதானா நான் சொல்வது?)
டாக்டர், நீங்க சொன்ன மாதிரியே பசுமாசுரர் சென்னையைத் தாக்கிட்டாங்க போல இருக்கே!
இங்க இருந்து உலகம் எங்கும் பயணம் செய்யத் திட்டம் போட்டு இருக்காங்களாம்.
நீங்க இந்தக் கட்டுரையை எப்ப எழுதினீங்கன்னு தெரியலை. ஆனா உங்க தொலை நோக்குப் பார்வையை மெச்சுகிறேன்.
இந்த செய்தியைப் படிச்சதும் உங்களோட இந்தப் பதிவைத்தான் நினைச்சுக்கிட்டேன்.
வாழ்த்துகள்.
இதுதான் லேட்டஸ்ட்-
http://www.indianexpress.com/news/superbug-lancet-doesnt-publish-rubbish-threat-is-real/660277/0
@நட்பாஸ்
கருத்துக்கு நன்றி.
இந்தக்கட்டுரை மருத்துவர்கள் தட்டுப்பாடு, மருந்துத்தடைகளால் மக்களே மருந்துகளை கடையில் வாங்கிச்சாப்பிடுகிற நிலையிருந்தபோது எழுதியது.அப்போது செப்டிசீமியாவால் அதாவது நோய்க்கிருமிகள் உடலை ஆக்கிரமிக்கிற நிலை வந்து அனேகர் இறந்தார்கள். அதெல்லாம் கணக்கில் வராத உயிரிழப்புக்கள்.
சுப்பர்பக் இலும் அந்த நிலை வந்துதான் உயிர் இழப்பைக்கொண்டு வரும்.
தொலைநோக்குப்பார்வை உங்களுக்கும் எனக்கும் இருந்து என்ன சார் பிரயோசனம்?.ஆட்சியில் இருப்பவர்களுக்கு எலக்ஷன் டைமில் பார்வை வந்து முடிய போய்விடுகிறதே.
Post a Comment