இருட்டு
எனக்கு
இஷ்டமாய்
விடியலுக்கான
இருளில்
எஞ்சும்
வெளிச்சம்
பற்றிய
நினைவுகளில்
வெப்பம்
இருக்கவில்லை
வண்ணங்களினதும்
காட்சிப்பொருட்களினதும்
நினைவுத்தோற்றங்களில்
விளிம்புகள்
கரைந்து போயிருந்தன
மனிதர்கள்
தோலற்றுப்போயிருந்தார்கள்
இருள்
எல்லையற்றிருந்தது
அழகானவை
அசிங்கம்
ஒளி பட்டுத்தெறித்து
பிரகாசிப்பவை
அழுது வடிபவை
என்றெல்லா
வெளிச்சத்தின்
இருண்ட
பேதங்களுமற்று
மனம் ஒளிரும்
என்றுதான்
எண்ணியிருந்தேன்
மிருதுவானவை
வழுவழுப்பானவை
குளிர்ச்சியானவை
சுகந்தமானவை..
.............................
ஒரு
துவாரங்களின் வழியே
தன்கரங்களைநீட்டி
இருளை
உறிஞ்சிக்கொண்டே
இருக்கின்றது
மனசு!
6 comments:
என்னமோ சொல்றீங்க, கொஞ்சம் புரியற மாதிரி இருக்கு, புரியாத மாதிரியும் இருக்கு...
மொத்தத்தில இந்த நவீன கவிதை நல்லா வந்திருக்கு, நன்றி டாக்டர்.
//
இருள்
எல்லையற்றிருந்தது
//
உண்மை
நல்ல கவிதை
@நட்பாஸ்
நன்றி
என்னமோ பேத்துகிறேன் விடுங்க :)
@வேலுஜி
கருத்துக்கு நன்றி
அதெப்படிங்க பேத்தல்னு அப்படியே விட்டுட முடியும்?
ஏதோ விஷயம் இருக்கு. என் மரமண்டைக்குதான் புரிய மாட்டேங்குது :(
@நட்பாஸ்
பேத்தலை விடத்தானே வேண்டும் :)
@வரசித்தன் ஒரு இதுக்கு புரியலை என்று சொன்னால் நீங்களே பேத்தல் என்று சொன்னால் எப்படி!
இதில் பல விஷயங்கள் இருக்கின்றன. அவற்றைக் குறித்து குறைந்தது ஐநூறு சொற்களாவது எழுத முடியும். அப்படியும் இதன் பொருளை முழுமையாய் விளக்க முடியாது.
நிச்சயமாக நல்ல கவிதைதான். அதை வாசகனின் அனுபவத்துக்கே தற்போதைக்கு விட்டு விடுகிறேன் :)
Post a Comment