என்ன அவசரம்?
யாரோ கேட்கிறார்கள்
என்னுள் வெளியுள்
இரு உலகங்கள்.
எந்த உலகில் இருந்து
கேட்கிறது இந்தக்குரல்.
உள்ளென்பதெது
புறமென்பதெதுவென்று
தெரியாமற்பின்னி
புழுவாய் நெளியும்
மனசில்
எங்கிருந்து எவர் கேட்கிறார்?
அவசரமொன்றுமேயில்லை!
இயல்பாகவேதான்
தொலைந்து கொண்டிருக்கிறேன்
நான்!
நிஜத்துக்கும் நிழலுக்குமான
ஓய்வற்ற அலைச்சலில்
ஆர்ப்பாட்டமில்லாமல்
கரைந்துகொண்டிருக்கிறேன்
மாய உலகின்
இருளிலிருந்து நீளுகின்ற
கரங்கள் என் மூச்சினைத்திருடுகின்றன
மின்னி காட்சிகளாய்ப்பின்னி
ஒலித்து
நிஜம் மறைக்கின்ற
இன்னொரு உலகில்
என் இருப்பு
அமிழ்ந்து கொண்டிருக்கின்றது
விரல்கள் சொடுக்கும்பொழுதில்
காட்சிகள் மாற்றுகிற மனசோடு....
உட்கார்ந்து கொண்டுதானிருப்பேன்
சிரித்துக்கொள்ளவும் கூடும்
பேசிக்கொள்வதுமுண்டு
வெளிக்கு
வெள்ளையும் சொள்ளையும்தான்
ஆயினும்
உள்ளே உக்கிரமான
போர் நிகழ்வதறிவதில்லை
இவ்வுலகம்
ஆச்சரியமில்லை
யாருக்கும் புரியாமல் போகும்
உள்ளே
மூழ்கிக்கொண்டிருப்பவரின்
அவசரம்
புரியப்படாமலே
மூழ்கிப்போவது
துரதிர்ஷ்டந்தான்
ஆனாலும்...
ஆழச்சென்றபின்
இருப்பதில்லையே
இந்த உலகு
***********************************************
தொடர்பான பதிவுகள்:
1.எனக்கு யாருமில்லை நான் கூட
2.காதில் கேட்கும் குரல்
3.The beautiful mind-இன்னுமொரு பார்வை
4.நீயும் பொம்மை நானும் பொம்மை;ஆட்டுவிக்கும் மனம்.
***********************************************
தொடர்பான பதிவுகள்:
1.எனக்கு யாருமில்லை நான் கூட
2.காதில் கேட்கும் குரல்
3.The beautiful mind-இன்னுமொரு பார்வை
4.நீயும் பொம்மை நானும் பொம்மை;ஆட்டுவிக்கும் மனம்.
12 comments:
அருமையான கவிதை.
மிக்க நன்றி!
அழகான வரிகளை உள்ளடக்கிய கவிதை ...
இன்னும் மேலும் வழங்க வாழ்த்துக்கள்
தேடலும், இனிய நடையும் கொண்ட நல்ல கவிதை.
Facebook ல் பகிர்ந்து கொள்கிறேன்.
காதலையும் காமத்தையும்
தம் மன அழுக்குகளையும்
கவிதையாகப் பாடும் நம்மிடையே
கடுமையான நோய் பற்றியும்
கனிவான ஒரு கவிதை.
@ natbas
கருத்துக்கு மிக்கநன்றி
@அரசன்
தங்கள் வருகைக்குக்கும் கருத்துக்கும் மிக்கநன்றி
@Dr.எம்.கே.முருகானந்தன்
மிக்க நன்றி டொக்டர்
Dr.எம்.கே.முருகானந்தன் said...
"கடுமையான நோய் பற்றியும்...
கனிவான ஒரு கவிதை"
மனம் சிக்கலுக்குள்ளானவர்களை புரிந்துகொள்ளமுடியாத சமுகத்தில் அவர்கள் உள்ளே படுகிற போராட்டத்தோடு வெளியிலும் போராடவேண்டியிருக்கிறது
இறுதியில் வெளிப்போராட்டத்தை கைவிட்டு முழு நோயாளியாகவே ஆகிவிடுகிறார்கள்.
எந்தவித நிபந்தனைகளும் எதிர்பார்ப்புமற்ற அன்பு(நோய்வாய்ப்பட்டவர்களால் திருப்பிச்செலுத்தமுடியாதில்லையா)
ஆதரவு புரிந்துணர்வு என்பனதானே முக்கிய மருந்து.
அது கிடைப்பதில்லை அனேகருக்கு.
...வேதனை
டாக்டர், நீண்ட விடுப்பாகி விட்டதே? இன்று வரும் நாளை வரும் என்று எத்தனை நாட்கள் பொறுத்திருப்பது?
கவிதை கிவிதை போடப்படாதா? :)
உங்கள் பதிவை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி பயனடைந்தேன். மிக்க நன்றி!
http://blogintamil.blogspot.com/2011/03/1_15.html
@எஸ் கே
எக்காரணத்தாலோ டாக்டர் பதிவுகளை நிறுத்தி விட்டார். நீங்கள் அவரது பதிவுகளை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி. இது அவருக்கு தொடர்ந்து எழுத ஊக்கம் கொடுக்கும் என்று எண்ண விரும்புகிறேன்.
நீங்கள் டாக்டரின் எழுத்துகளைப் பரவலாக எடுத்துச் செல்வது தமிழுக்கு செய்யும் சேவை. மிக்க நன்றி சார்.
@ natbas said...
ஆமா சார். டாக்ரோட எழுத்துக்கள் என்னை ரொம்ப கவர்ந்தவை. அவர் மீண்டும் எழுத வருவார் என நம்புவோம்!
@டாக்டர்
உங்களுக்கு என் அழைப்பு. அவசியம் வரவும்!
http://www.sasariri.com/2011/03/blog-post_14.html
@எஸ்.கே
மிக்க சந்தோஷமும் நன்றியும்.
@நட்பாஸ்
உங்கள் அன்புக்கு நன்றி
@கிரி
வாழ்த்துக்கள்.(மானசீகமாக) வருகிறேன்
நேர நெருக்கடி காரணமாக எழுதமுடிவதில்லை.
உங்கள் எழுத்துக்களைத்தொடர்ந்து படிக்கிறேன்.
Post a Comment