“ நீங்கள் வித்தியாசமான ஆள்தான்”
“ஏன் அப்படிச்சொல்லுறியள்”
“இல்லை எல்லாச்சனமும் அந்தப்பக்கமா சேர்ந்து ஓடுது நீங்க மாத்திரம் தனியாளா இருந்து புத்தகம் படிச்சுக்கொண்டிருக்கிறியள் அதுதான் கேட்டன்”
”சனங்கள் மந்தை மாதிரி.ஒரு செம்மறி ஓடினால் எல்லாம் ஓடும் பின்னாலை”
“நீங்கள் படிச்சவர் எல்லாத்தையும் யோசிச்சு பகுத்தறிஞ்சுதான் செய்வியள்”
” நான் அப்பிடித்தான்.எல்லாருஞ்செய்யினமெண்டதுக்காக நான் ஒண்டையுஞ்செய்யிறதில்லை.முதல்ல எனக்குச்சரியெண்டு படோணும். அறிவுக்கு பொருந்தோணும்.கன சனத்துக்கு பிரபஞ்ச அடிப்படை தத்துவ அறிவு இல்லை.பொருளுக்கூடான பார்வைதான் பொதுவாய் இருக்குது. உள்ளிருந்தபடியே வெளியிலிருந்து பார்க்கிற பார்வையை ஞானம் தரும்.சனங்களைக்குற்றஞ்சொல்லவும் முடியாது அவங்கள்ட அறிவு அவ்வளவுதான்... ”
“என்னவோ சொல்றியள்.....உண்மையச்சொன்னால் எனக்கு நீங்கள் சொல்றது விளங்கேல்லை… என்ரை மூளை மந்தம்..நீங்கள் படிச்சவர்..சொன்னாச்சரிதான். ...’ஊரோடு ஒத்து ஓடு’ .ஏன் கரைச்சலை …இதுதான் என்ரை பொலிசி”
“அது சரி எல்லாச்சனமும் ஓடுது .நீங்கள் ஏன் போகாமா இருக்கிறியள்”.
“என்ன நீங்கள்!....... நான் போகேல்லையா? …ஹா..ஹா. நான்தான் முதல் ஆளாய் அங்க நிண்டனான் மூண்டுலீற்றர் எடுத்துக்கொண்டு வந்து வீட்டை வச்சுட்டுத்தானே வந்திருந்து உங்களோடை கதைக்கிறன். ”
“அஹ்… என்ன.. குடுக்குறாங்கள் அங்கை”
“அடக்கடவுளே…. மண்ணெண்ணை குடுக்கிறாங்கள்... வெளியிலை எட்டிப்பாத்திருந்திருப்பியளெண்டா தெரிந்திருக்கும்.தெருவெல்லாம் கானோடு சனங்கள்.குடும்பத்துக்கு மூண்டு லீற்றர் தர்றாங்கள் மூண்டு மாதத்துக்கு விளக்கெரிக்கலாம் கொஞ்சந்தான் வந்திருக்குதாம் முடிஞ்சு போடும் எண்டும் சொன்னாங்கள் அதுதான் ஓடுதுகள் நெருப்பு விலை வெளியிலை;
‘’ஓ...முன்னமே ஏன் சொல்லேல்லை.இருட்டுக்குள்ளை கிடக்கிறன் .......எண்ணையில்லாமல்”
புத்தகத்தை போட்டுவிட்டு ’கான்’ எடுத்துக்கொண்டு வெளியில் ஒடினார் அவர்.
3 comments:
மண்ணெண்ணைய் வாங்க ஏன் இவ்வளவு அவசரமாக ஓடுகிறார்?
புத்தகத்தைக் கொளுத்தப் போகிறாரோ!
வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுகிற மாதிரி சிரிக்க சிரிக்க பிரபஞ்ச ஞானத்தின் பால பாடத்தைத் துவக்கி இருக்கிறீர்கள், நன்றி.
அவகாசம் கிடைக்கும்போது தொடருங்கள் என்று வேண்டுகிறேன்.
நன்றி.
நன்றி நட்பாஸ்
அது நாம்ன்மண்ணெண்ணைக்கு பட்ட பாடு...
சின்ன திருத்தம் செய்திருக்கிறேன் நன்றி
உங்கள் கேள்விக்குப்பதிலாக.
:))
Post a Comment