Friday, April 8, 2011

தர்மசங்கட வைத்திய ரகசியங்கள்-I


"சொல்லுங்கோ  என்ன பிரச்சினை?"

"எனக்கு நாய் கடிச்சுபோட்டுது டொக்டர்"

"அட ஏன் நாய்க்குக்குக்கிட்டபோனனிங்கள்"

"நான் தெருவாலை போய்க்கொண்டிருந்தன். நாய் பின்னாலை வந்து" கடிச்சுட்டுது

”அ.. நாய் பின்னாலை வந்து ?
…… நாய்க்குபின்னாலை வாயில்லையே முன்னாலைதானே இருக்கு.”

”நாய் எனக்குப்பின்னாலை வந்ததது எண்டதைத்தான் அப்படிச்சொன்னனான்.”

”சரி. என்ன பெயர் சொல்லுங்கோ.”

”நாயின்ரை பெயர் தெரியாது. கறுப்பு நாய்.”

”நாயின்ரை பெயரைக்கேட்கேல்லை. உங்கடை பெயரைக்கேட்கிறன்.”

”ராமப்பா செல்லம்”

”ராம் அப்பா செல்லம்?  ஏன் காணும் நீர் அம்மா செல்லம் இல்லை?உம்மட பெயரைச்சொன்னாக்காணும் நீங்கள் ஆற்ரை செல்லம் என்றது வைத்தியத்துக்குத்தேவையில்லை சரியா?”

”இல்லை டொக்டர் என்ரை பெயர்தான் செல்லம். அப்பான்ரை பெயர் ராமப்பா.”

”நல்ல  சூட்சுமமான பெயர். சரி…நாய் எங்க கடிச்சது”

”சிறாம்பியடியிலை மெயின்றோட்டிலை ஏற முன்னம் ஒரு மதகு வருமே அதடியிலை ஓடியந்து கடிச்சுது.

”மதகு வருகுதோ.....அதை நான் கேட்கேல்லை. உடம்பிலை எங்க ”.

”அட இங்கினை கெண்டைக்காலிலை கவ்வினது.இரண்டு பல்லு பட்டிருக்குது இஞ்சை பாருங்கோ டொக்டர்”.

”ஆழமில்லைக்காயம் தோல் கிழிபடேல்லை……
நீங்க நடந்து வாற நேரம் நாய் சும்மா வந்து கடிச்சதோ”

”டொக்டர் என்ன கேக்கிறியள் நாய் சும்மாதானே திரியும்.கோட்டுச்சூட்டு போட்டுக்கொண்டா திரியும்”.

”இவனாரடா…..அதைக்கேக்கேல்லை.சும்மா தெருவாலை போகேக்கை ஒரு நாய் வந்து கடிக்குதெண்டா…...........”

‘’நான் சும்மா போகேல்லை டொக்டர்”

‘’ அதுதானே பார்த்தன் நாயைக்கண்டு வெருண்டிருப்பியள்.கல்லையும் கண்டு நாயையும் கண்டா விடமாட்டியளே’’

‘’ எனக்கு அந்த வியாதியெல்லாம் கிடையாது. நானும் நாய்வளர்க்கிறவன். என்ரை பாட்டிலை ஏதோ யோசனையாப்போய்க்கொண்டிருந்தனான்’’

‘’நாயின்ரை வாலைக்கீலை யோசனையிலை மிதிச்சியிருப்பியள்’’

‘’டொக்டர்………….நான் நாய் கடிச்சு நொந்து போய் வந்திருக்கிறன். நீங்கள் நாய்ப்பக்கம் இருந்து பேசுறமாதிரியிருக்குது. ரோட்டால் சும்மா போய்க்கொண்டிருக்கிறவனை ஒரு நாய் வந்து கடிக்கிறதெண்டா கடிவேண்டினவனிலை என்ன குற்றம்?”

’’ நான் பக்கச்சார்பில்லாத ...ஆள்.....ஓ..இப்ப என்னத்துக்கு......அதை .....ஏன் கேட்டனெண்டா அப்பிடி ஒரு நாய் தூண்டுதலுமில்லாமல் வந்து கடிக்குதெண்டா அது வெறிநாயாயிருக்கலாம் எண்டுதான்’’

‘’ பாக்க அப்படித்தெரியேல்லை கழுத்துப்பட்டி கட்டியிருந்தது’’

‘’ நானுந்தான் கழுத்துப்பட்டி கட்டியிருக்கிறன்........”



************************************************************************ 
.........திக்... திக்..... தொடரும் ..........




3 comments:

natbas said...

//”டொக்டர் என்ன கேக்கிறியள் நாய் சும்மாதானே திரியும்.கோட்டுச்சூட்டு போட்டுக்கொண்டா திரியும்”.///

:))))))))))))))))

ஆனாலும் இதுக்கெல்லாம் தொடரும் போடறது அநியாயம்...

இது திகில் கதையா என்ன!

A doctor said...

@நட்பாஸ்..
நன்றி

சும்மா..வந்தவாக்கில்...எழுத்து :)

natbas said...

வந்த வாக்கில் வந்ததா எழுத்து?

நன்றாக இருக்கிறது! :))